நெருக்கடியான தருணத்தில் இந்தியா அளப்பரிய உதவிகளை செய்து வருகின்றது – நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்ந்தும் பூஜ்ஜியமாகவே உள்ளது. ரணில் ரணில் தெரிவிப்பு!

இலங்கையில் தற்பொழுது டொலர் கையிருப்பானது பூஜ்ஜியமாகவே உள்தாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அரசாங்கத்தை நான் ஒப்படைக்கும் போது ஏழரை பில்லியன் டொலர்கள் இருந்தன, எனினும் அவை தற்போது இல்லை. இருப்பினும் அதனை சமாளித்து நாட்டை பொறுப்பேற்க ஒருவர் தேவை , அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் எனது தலமையின் கீழ் அமைக்கப்பெற்ற அமைச்சரவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளனர். அனைவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
ஆனாலும் அவற்றை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம், இந்த நெருக்கடி தருணத்தில் இந்தியா அளப்பரிய உதவிகளை செய்து வருகின்றது.
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்திடமும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வருகின்றோம்.
இருப்பினும் என்னும் சில நாட்களில் 30 – 40 மில்லியன் டொலர்களே கையிருப்பு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|