நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, March 30th, 2022

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் இன்னும் கிராமத்துக்குச் செல்ல முடிகின்ற போதிலும் மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை எனவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியமானது எனவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்திடம் நிதியைக் கடுமையாகக் கையளிப்பதை எண்ணெய் மற்றும் எரிவாயு வரிசையில் நிற்கும் மக்கள் நன்கு அறிந்திருந்த போதிலும் அதற்கு அரசு வழங்கும் பதில்கள் போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைந்து தீர்வு காணவேண்டும் எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: