நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, April 21st, 2022

இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 300 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதிமுதல் மார்ச் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 29 ஆயிரத்து 95 ஆகும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்க மார்ச் 1 முதல் 18 வரை 43 ஆயிரத்து 761 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மார்ச் மாதத்தின் 18 நாட்களில், இங்கிலாந்திலிருந்து 8,743 பேர் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,802. ஜெர்மனியில் இருந்து 4,908 சுற்றுலாப் பயணிகளும், பிரான்சிலிருந்து 2,759 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்ரேலியாவில் இருந்து 2,645 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.

தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 4000 முதல் 5000 வரை இருந்த போதிலும், தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1000 முதல் 2000 வரை உள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. எதிர்காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை இடையூறுகள் இன்றி ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: