நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி – இன்றும் கூடியது அமைச்சரவை!

Tuesday, February 22nd, 2022

நாடு எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி மற்றும் மின் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்விடயம் கறித்து ஆராய இன்றும் அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பொதுமக்களின் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள விடயங்கள் குறித்துஆராய்வதற்காகவே ஜனாதிபதி இன்றும் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இலங்கையின் பங்குசந்தை நேற்று பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2020 ஒக்டோபரின் பின்னர் நேற்று முதல்தடவையாக பங்குசந்தை பாரிய வீழ்;ச்சியை சந்தித்துள்ளது.

மின்வெட்டு எரிசக்தி நெருக்கடி போன்றவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்திருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: