நெடுந்தீவு வைத்தியசாலை குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதி!

Thursday, March 25th, 2021

நெடுந்தீவு மக்களின் பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வைத்தியசாலை தொடர்பில் உள்ள பிரச்சினைகளை நாம் ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக நெடுந்தீவு நிலப்பரப்புடன் தொடர்பை அற்றதும் 13 மைல் அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் உள்ள ஒரு தீவாகவும் காணப்படுவதுடன் இங்கு 6,000இற்கும் சற்றுஅதிக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் நோய்வாய்படும் மக்களை சிகிச்சைக்காக எடுத்து செல்வதற்கு அம்புலன்ஸ் படகு சேவைகள் கூட இல்லை. இங்கிருந்த நிரந்தர வைத்தியர் ஓய்வு பெற்று சென்றுள்ளார்.

இரண்டு வைத்தியர்கள் தற்காலிக அடிப்படையில் குறித்த வைத்தியசாலைக்கு வந்து செல்கின்ற நிலைமையே காணப்படுகின்றது என்றும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருவதாகவும் சுகாதார அமைச்சக்கு பலதரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் நெடுந்தீவு பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: