நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படவேண்டும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!
Thursday, October 13th, 2016
நெடுந்தீவு பகுதி வைத்திய தேவைகளை நிவர்த்திசெய்யும் வகையில் ஒரு நிரந்தரமான வைத்தியரை நியமித்து அங்குள்ள மக்களது அவசர வைத்திய தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
நெடுந்தீவு பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதிம் (12) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கலந்துகொண்ட கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரனால் (வி.கே.ஜெகன்) குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
அங்கு அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் –
நெடுந்தீவு பிரதேசமானது யாழ்ப்பாணத்துடன் தரைவழி; பாதையை கொண்டிராத காரணத்தால் இங்குள்ள மக்கள் அவசர வைத்திய தேவைகளுக்கான பெரிதும் அவதியுற்றுவரகின்றனர் சில சமயங்களில் உடனடி சிகிச்சைகள் கிடைக்கப்பெறாமையால் உயிரிழப்பகளும் எற்படகின்றது எனவெ இப்பகதி மக்களது நலனில் அக்கறை கொண்டு இங்குள்ள வைத்தியசாலைக்கு ஒரு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படவேண்டும்.
மேலும் நெடுந்தீவு கிழக்கு பகுதி மக்களது தேவைகள் கருதி மின்சாரம் வழங்கப்படல் வேண்டும் என்பதுடன் நெடுந்தீவில் காற்றாடியினுடாக மின்சாரம் பெறுதல் தொடர்பாக துறைசார் அமைச்சரின் பார்வைக்கு டக்ளஸ் தேவானந்தா கொண்டசென்றுள்ளார் எனவும் ஆரோ பிளான்ட் குடி நீர் அதிகளவான மக்களது பாவனைக்க வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்..
இதனிடையே குறித்த பகுதி போக்குவரத்து தேவைகளுக்காக புதிய படகு ஒன்றை அமச்சராக டக்ளஸ் தேவானந்தா இருந்தகாலத்தில் வழங்கியதை நினைவூட்டிய குகேந்திரன் குறித்த பகுதியிலுள்ள பிரதான வீதிகள் புனரமைக்கப்படாமை பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தார்
Related posts:
|
|