நெடுந்தீவு வெட்டகளி குளத்தில் 6 இலட்சம் இறால் குஞ்சுகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் இன்னொரு திட்டம்!

Saturday, January 11th, 2020

பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 6 இலட்சம் இறால்; குஞ்சுகள் நெடுந்தீவு வெட்டக்களி குளத்தில் விடப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் நேற்று(09.01.2020) நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கலந்து கொண்டு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

ஏதிர்வரும் வைகாசி மாதமளவில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படும் குறித்த இறால் வளர்ப்பு திட்டத்தின் ஊடாக சராசரியாக ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய அண்ணளவாக 7200 கிலோ கிராம் இறால்களை அறுவடை செய்ய முடியும் என்று துறைசார் நிபுணனர்களினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மாவட்ட நீர்வாழ் உயிரின வள விரிவாக்கல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் நெடுந்தீவு நிர்வாக செயலாளர் முரளி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் நெடுந்தீவு பிரதேச செயலாளர் உட்பட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நன்னீர் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் நிலைகளில் விடப்பட்டிருந்தமை குறிபப்பிடத்தக்கது.

Related posts: