நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் சுகாதாரப் பணிமனை நிறுவ நடவடிக்கை!

Friday, June 15th, 2018

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது –

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய பிரதேச பிரிவுகளில் தனித்தனியாக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரி பணிமனை பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. குழந்தைகள், சுற்றாடல், நோய்கள், விழிப்புணர்வுகள், மருத்துவ சேவைகள் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.

ஆகவே பிரதேச செயலக பிரிவில் பணிமனை அமைவது அவசியம். ஆனால் நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் பணிமனை வேலணையுடன் இணைந்தே செயற்பட்டு வருகின்றது. நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கடல் வழியாகப் பயணம் செய்து வேலணை பணிமனையிலேயே சுகாதார சேவைகளை நிறைவு செய்கின்றனர்.

சுகாதார திணைக்களத்தின்படி ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிக்கும் தனியான மருத்துவ அதிகாரி பிரிவு இருத்தல் வேண்டும். என்பதற்கு அமைவாக நெடுந்தீவில் பணிமனை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: