நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் “புலவருக்கு” ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Wednesday, August 12th, 2020

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் புலவர் என்று அழைக்கப்படும் A W அரியநாயகம் காலமானார்.

வயது மூப்பின் காரணமாக சிலகாலங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆழந்த அனுதாப்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்திரனரது துயரில் பங்கெடுத்தும் கொள்கின்றது.

முன்பதாக அமரர் A W அரியநாயகம் அவர்கள் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெடுந்தீவு பகுதி இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பற்றிருந்த நிலையில் மக்கள் படும் வேதனையை போக்குவதற்காக சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நெடுந்தீவு பகுதிக்க அழைப்பதில் பெரும்பங்காற்றியிருருந்தார்.

அத்துடன் அமரர் அரியநாயகம் அவர்கள் தனது வாழ்நாளில் நெடுந்தீவு மகாவித்தியால அதிபராகவும் ,  கேட்ட கல்வி அதிகாரியாகவும்,  பலநோ கூ ச தலைவரராகவும், ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் பிரதிநிதியாக  நெடுந்தீவு பிரதேச சபையின்  தலைவராகவும் இருந்து செயற்பட்டு நெடுந்தீவு மக்களையும் அப்பிரதேசத்தின் வளங்களையும் பாதுகாத்து தனது ஆற்றலையும் ஆழுமையையும் காண்பித்திருந்ததுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெருங்கிய நட்புக்குரியவருமாவார்.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்றையதினம் காலமானமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களிலிருந்தும் அன்னாருக்கு தமது அஞ்சலிகளை தெரிவித்து இரங்கலறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு - இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங...
பசுமை பொருளாதாரத்துக்குள் பிரவேசிக்கும் பிராந்தியத்தின் முதல் நாடாக இலங்கையை மாற்ற உத்தேசம் - ஜனாதிப...
எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை - ஜனாதிபதி ரணில் ...