நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் வறிய மக்களுக்குவாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Friday, July 5th, 2019

நெடுந்தீவுப் பிரதேசத்தில் வசிக்கும் வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரி அலன்ரின் (உதயன்) வழங்கி வைத்தார்.

நெடுந்தீவு பிரதேசத்தில் வாழ்ந்துவந்த நிலையில் நாட்டிலேற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர்ந்து சென்று வாழும் மக்களால் உருவாக்கப்பட்ட நெடுந்தீவு கனடா ஒன்றியத்தினரது பங்களிப்புடன்  குறித்த உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த 16 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த உதவித் திட்டத்தின் இவ்வாண்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நெடுந்தீவு  தேவா பொது மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் நிதி என்பன தெரிவு செய்யப்பட்ட வறிய மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரி அலன்ரின்  பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: