நெடுந்தீவு பிரதேசசபை விசாரணை முடக்கம்!

Thursday, January 10th, 2019

நெடுந்தீவுப் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் முடங்கியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப் பணிகள் இடம்பெறவில்லை என்று தெரியவருகின்றது.

நெடுந்தீவுப் பிரதேசசபையின் உப தவிசாளர் மே மாதம் 9 ஆம் திகதி உயிரிழந்ததை அடுத்து அந்தப் பதவி வெற்றிடமாகியது. சபையில் எந்தவொரு கட்சிக்கும் 50 சதவீதத்துக்கு மேல் ஆசனங்கள் இன்மையால் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் தெரிவு இடம்பெறவேண்டும் என்பது சட்ட ஏற்பாடு. உபதவிசாளர் தெரிவுக்காக நான்கு கூட்டங்கள் உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் நடத்தப்பட்டபோதும் கோரம் இன்மையால் ஒத்தி வைக்கப்பட்டன.

ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதியுடன் வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் விசாரணை நடத்துவதற்கான ஆணையை நியமனத்தை வழங்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வசந்தசேனன் கோரியுள்ளார். இதுவரையில் மீள் நியமனம் வழங்கப்படவில்லை.

நெடுந்தீவுப் பிரதேச சபை உபதவிசாளர் இன்றியே இயங்கி வருகின்றது.

Related posts: