நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!
Monday, February 22nd, 2021குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த இருவரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டவேளை அவர்கள் பயணித்த படகு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிகாட்டுவானிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடை மரியநாயகம் அமலன்மேயன் மற்றும் நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய றொபின்சன் ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்தபோது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈரானுக்கு எதிராக தாக்குதல் : உத்தரவினை மீளப் பெற்றுள்ள ட்ரம்ப் !
கலவரத்தை தூண்டிய முதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். – அதை தொடர்ந்து நடைபெற்ற கொடூரமான சம்பவங்...
பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை - பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|