நெடுந்தீவுக்கான இலவச குடிநீரை தடுத்து நிறுத்தியது கூட்டமைப்பு!

Monday, March 7th, 2016

சிலகாலமாக நெடுந்தீவுப் பகுதி மக்களுக்கான இலவச தூயகுடிநீர் வழங்கலை மேற்கொண்டுவந்த கடற்படையினரது நடவடிக்கைகளை கூட்டமைப்பினர் தமது சாணக்கியமற்ற அரசியல் நடவடிக்கைகளின் மூலம் தடுத்த நிறுத்தியுள்ளாதால் தாம் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய இடையூறுகளை எதிர்கொள்வதாக நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது விடயம் தொடர்பாக தெரியவருவதாவது –

ஆரம்பகாலங்களில் கடற்படையினர் சில நெருக்குவாரங்களை ஏற்படுத்தியிருந்தபோதும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் கடற்படையினருடன் ஏற்படுத்திக்கொண்ட தமது சாணக்கியமான அரசியல் நகர்வுகளால் பொதுமக்களுக்கான பலதரப்பட்ட உதவிகளை கடற்படையினர் மூலம் மேற்கொண்டுவந்தனர்.

ஆனால் தற்போது கூட்டமைப்பினர் தமது பகுதியில் பிரசன்னமாகி சாணக்கியமற்ற ஒரு குறுகிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதனால் பல பிரச்சினைகளை தாம் எதிர்கொண்டுவரும் நிலையில், கடற்படையினர் இலவசமாக மக்களுக்கு இதுவரை நாள் வழங்கிவந்த குடிநீரை தற்போது தடுத்து நிறுத்தியுள்ளனர்.  இதனால் நெடுந்தீவில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரை பெற்றுக்கொள்ளவதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக தமது ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.

Related posts: