நெடுந்தீவில் குதிரைகள் உயிரிழக்கும் அபாயம்!

Tuesday, July 4th, 2017

அதிகவரட்சியான காலநிலை காரணமாக தீவகத்தின் நெடுந்தீவில் வாழும் குதிரைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சூழலியலாளர்களும், மக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

நெடுந்தீவின் முக்கியசொத்தாகவும்,மண்ணின் தனித்துவஅடையாளமாகவும்கருதப்படும் இக்குதிரைகள் அதிகவரட்சியானகாலநிலையால் உயிரிழந்துவருவதாகவும், இவற்றைப் பாதுகாக்கும் பொருட்டுகுதிரைகள் சரணாலயமொன்றுஅமைக்கப்படவேண்டுமெனமக்களால் தொடர்ச்சியானகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், இவ்விடயம் தொடர்பாக இதுவரையில் எவ்விதமானநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும் மக்கள் கவலைதெரிவித்துள்ளனர்.

நெடுந்தீல் காணப்படும் அதிகவரட்சியால் குதிரைகள் குடிநீரையும்,மேய்ச்சல் தரைகளையும் நாடிச் செல்வதாகவும் அவற்றுக்கானபோதியபராமரிப்பு இல்லாதகாரணத்தாலேயேஉயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவிடயம் தொடர்பில் துறைசாரந்தவர்கள் அக்கறையற்றிருக்கின்றமைதமக்குமிகுந்தவேதனையைத் தருவதாகவும் மக்கள் கவலைதெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: