நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – அமைச்சர் ரவி கருநாயக்கா!

நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்திநிலையம் அமைக்கப்பட்டு அந்தப்பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு செய்யப்படும் என்று மின்வலு மற்றும் சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருநாயக்கா தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
நெடுந்தீவில் சுமார் 4 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு மின் தேவையை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் முதற்கட்டமாக அங்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கேள்வி கோரல் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் மலேரியா தடுப்பூசியை ஏற்றுங்கள் - வைத்திய கலாநிதி ஜெயக்குமரன்!
மகளிருக்கான பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்!
வடக்கு விவசாயிகள் நெல் அறுபடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது - யாழ். பல்கலைகழக புவியியல்துறை வி...
|
|