நெடுந்தீவில் அதிகரிக்கும் கடலரிப்பு – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

நெடுந்தீவு பிடாரி அம்மன் கோவில் முதல் காளவாய்முனை வரையான பகுதி மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகி வருதவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கான தடுப்பு சுவர்களை விரைவாக அமைக்க வேண்டும் என நெடுந்தீவு கடற்றொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதேச கடற்றொழிலாளர்கள் கூறுகையில்,
நெடுந்தீவின் பிரதேசத்தின் கரையோரப் பகுதிகள் மிக வேகமாக கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன.
நெடுந்தீவின் கிழக்கு பகுதியான பிடாரி அம்மன்கோவில் முதல் காளவாய்முனை வரை கரையோரப் பகுதிகளில் அதிகளவான மக்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுதுடன், அதிக கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் ஈடுபட்டு வருவதுடன், படகுகளை கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி பகுதியானது மிக வேகமாக கடலரிப்புக்குள்ளாக்கி வருகின்ற நிலையில் இதற்கான கடற்தடுப்பு சுவர்களை சம்பந்தப்பட்டவர்கள் விரைவாக அமைத்துத் தரவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
Related posts:
|
|