நெடுங்கேணியில் 17 வயது சிறுமி மாயம்!

Tuesday, June 14th, 2016

நெடுங்கேணி, ஒலுமடுவைச் சோந்த 17 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவியே தனது தையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாக கடந்த சனிக்கழமை சென்ற போதிலும் மீண்டும் வீடு வந்து சேரவில்லை என சிறுமியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு வரை சிறுமி வீடு வந்து சேராமையினால் தாம் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: