நூற்று நாற்பதாயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏலம் – மத்திய வங்கி அறிவிப்பு!

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்!
மஹர சிறைச்சாலையின் விவகாரம் - 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் – மதிப்பீட்டுக் க...
ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த தனியார் வங்கிகள் தீர்மானம்!
|
|