நூறடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி – பலர் பரிதாப நிலையில்!

Thursday, January 17th, 2019

பதுளை – லுணுகல பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்து பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் லுணுகல பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லுணுகல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts:

உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை - அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவிப்ப...
இலங்கை - அவுஸ்திரேலியா இடையே நடைமுறை ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது - வெளிநாட்டு அமைச்சர் தினேஷ...
இலங்கையின் மோசமான நிலைமைக்கு ஊழலே காரணம் - பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!