நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் வெளியேற முடியும் – இலங்கை பணியாளர்களுக்கு சலுகையளித்தது சவுதி!

Tuesday, September 8th, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் தற்போது அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவர்கள் எந்தவிதமான அபராதம் அல்லது கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமம் இல்லை எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இலங்கை பணியாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இது தற்காலிக விசேட சலுகை மட்டுமே எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: