நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் – சில பகுதிகளில் இரவில் மின்சார தடை ஏற்பட வாய்ப்பு – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தகவல்!

Sunday, December 12th, 2021

நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளைமறுதினம் பழுதடைந்த ஜெனரேட்டர்கள் தேசிய மின்வலயத்துடன் இணைக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அதன் பழுது காரணமாக சில பகுதிகளில் இரவில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மின்தடை ஏற்படலாம் என அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்சாரம் தடைப்படும். எனினும் நாளை மறுதினம் வரை மாத்திரமே மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்களின் தேவைகளை அறிந்து செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா - பிரபல சட்டத்தரணி றெமிடீயஸ்  !
எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!
ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாயன்று நிறைவுறுத்...