நுரைச்சோலை மின் நிலையம் தொடர்பான சீன விசேட நிபுணர்களின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

Tuesday, November 22nd, 2016

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்க இயந்திரத்தைப் பரிசோதிப்பதற்காக இலங்கை வந்துள்ள சீன விசேட நிபுணர்களின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.அறிக்கை கிடைத்தவுடன் மின் பிறப்பாக்க இயந்திரத்தின் திருத்த வேலைகள் தொடர்பில் அடுத்தகட்ட தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.

செயலிழந்துள்ள முதலாவது பிறப்பாக்க இயந்திரத்தின் திருத்த வேலைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இயந்திரம் தொடர்பாக ஆராய்ந்து இன்றைய தினத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், அதன் பின்னரே குறிப்பிட்ட மின் பிறப்பாக்க இயந்திரத்தை திருத்துவதற்கான செலவீனத்தை இலங்கை மின்சார சபையா அல்லது சம்பந்தப்பட்ட சீன நிறுவனமா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

nuraicholai

Related posts:

மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ ...
ஜனநாயகத்தை நேசிப்பவர் ரணில் - பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார ச...