நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு – திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 – 16 நாள்களாகும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, August 15th, 2022

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் அலகு செயலிழந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பவியலாளர்கள் கோளாறினை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2 ஆவது அலகில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் 3 ஆவது அலகு தொடர்ந்து செயற்பட்டுவருகிறது.

மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் (West coast) மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பழுதடைந்துள்ள முதலாவது மின் பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 – 16 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய மின்வெட்டு ஒரு மணித்தியாலம் இருபது நிமிடங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை (16) முதல் மின்வெட்டை நீடிக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (15) காலை ஏற்பட்ட பழுதடைந்தமையினால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின்விநியோகத்திற்கு முழுமையான பங்களிப்பு செய்யமுடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று (15) முதல் நாளாந்த மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதியில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றையதினம்முதல் 3 மணித்தியாலங்களுக்கு தினசரி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: