நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய திருத்த பணிகளுக்காக சீன நிபுணர்கள் வருகை!

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை திருத்துவதற்காக சீன நிபுணர்கள் இருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் மின்பிறப்பாக்கியை திருத்துவதற்கான ஆலோசனைகளை அவர்கள் தற்போது வழங்குவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால் தேசிய கட்டமைப்பிற்கான 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை.
இதனால் மிக துரிதமாக மின்பிறப்பாக்கியை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் !
தபால் விநியோக பணியாளர்களுக்கு சைக்கிள்கள்!
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178ஆக உயர்வு - சுகாதார பிரிவு!
|
|