நுரைச்சோலை அனல்மின் நிலைய பிரச்சினையை சீர்செய்ய சில தினங்கள் எடுக்கும்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை சீரமைப்பதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் ட்ரான்ஸ்மிசன் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் 3 பிரதான மின் உற்பத்தி இயந்திரங்களும் செயல் இழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த சம்பவத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்களுக்கான மின்சார விநியோகம் தடைபட்டிருந்தது.தற்போது குறித்த பிரதேசங்களுக்கான மாற்றுவழி மின்சார விநியோகம் வழங்குவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களுக்கு பல்வேறு சலுகைகள்: பெரமுன வேட்பாளர் கோத்தாபய அறிவிப்பு!
க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – அமைச்சர் மஹிந்தானந்த அள...
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 6268 பேர் பாதிப்பு -524 பேர் இடைத்தங்கல் ...
|
|