நுண்நிதிக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, January 4th, 2021

பெருமளவான கிராமப்புற வறிய மக்கள் எதிர்நோக்கியுள்ள நுண்நிதிக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிடுவதாக சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வணிக மேம்பாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நுண்நிதிக்கடனினால் பாதிக்கப்பட்டவர்களில் 93 சதவீதமானோர் பெண்களாவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக எதிர்காலத்தில் மானியங்களை வழங்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: