நுண்நிதிக்கடன் சுமையில் இருந்து மக்களை மீட்க வகுக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு சுமைகளாக இருக்கக் கூடாது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Wednesday, July 25th, 2018

நுண்நிதிக்கடன் சுமையில் இருந்து மக்களை மீட்க மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நுண்நிதிக்கடன் சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு அமைப்புகள் ஊடாக இலகு கடன்களை வழங்கி குறித்த சுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் கூட்டுறவு அதிகாரிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த தவநாதன் நுண்கடன் சுமை மக்களை பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே அவர்களை முழுமையாக இந்த சுமையிலிருந்து மீட்டக வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் மீண்டும் கடன் சுமைகளுக்கு உள்ளாக நேரிடும் எனவும் வை.தவநாதன் மேலும் தெரிவித்தார்.

நுண்கடன் சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலவரங்கள் குறித்து மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

Related posts: