நுண்கடன் திருத்தச் சட்டத்துக்கான அனுமதி அமைச்சரவையில்!

Tuesday, July 24th, 2018

நுண்கடன் திருத்தச் சட்டத்துக்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆகக்கூடிய வட்டி விகிதங்களுக்கு கடன்களை வழங்கிய நுண்கடன் நிதி நிறுவனங்களைத் தண்டிப்பதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

சில நிறுவனங்கள் 40 சதவீத வட்டிக்கு கடன்களை வழங்கியுள்ளன என்றும் புதிய சட்டத்தின் பிரகாரம் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் 30 சதவீத வட்டியை மாத்திரமே அறவிடக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்கள் பெற்றுக்கொண்டு தற்போது செலுத்தப்படாமல் உள்ள கடன்களில், 50 சதவீதத்தை அரசாங்கம் செலுத்தி முடிக்கும்.

அத்துடன், கூட்டுறவுகளின் மூலம், தொழில் முயற்சியாண்மைத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: