நுண்கடன்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Thursday, July 26th, 2018

வரட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடன்களில் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் குறைவான கடன்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றுக்கொண்ட கடன்களே இவ்வாறு இரத்துச் செய்யப்படவுள்ளன.

ஒரு இலட்சம் அல்லது அதற்கு குறைவான நுண்கடன்களைப் பெற்றுக்கொண்ட பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்து செய்யப்படும் கடனின் மூலத் தொகையை அரசாங்கத்தின் திறைசேரி செலுத்துவதுடன் அதன் வட்டித்தொகையை நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: