நுணாவில் வாள்வெட்டுச் சம்பவம்: மூன்று சந்தேகநபர்கள் கைது 

Sunday, October 15th, 2017

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைத் தாம் கைது செய்துள்ளதாக  சாவகச்சேரிப் பொலிஸார் இன்று(15) தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை(12) முற்பகல் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் ஹெல்மட்டால் முகத்தை மறைத்துக் கொண்டு வந்த இனம் தெரியாத இருவர் சனநடமாட்டம் உள்ள பகுதியில் நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலில்  இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவம் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கமராவில் பதிவாகியிருந்த நிலையில் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வந்த சாவகச்சேரிப் பொலிஸார் அதேயிடத்தைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்

Related posts: