நுகர்வோர் அதிகார சபையின் வருமானம் அதிகம்!

Monday, January 23rd, 2017

நுகர்வோர் அதிகார சபையினால், கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 21,819 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, வர்த்தகர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம் காரணமாக, 90 மில்லியன் ரூபாய் வருமானம், சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, 2016இல் கிடைக்கப்பெற்ற வருமானம், 33 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் மாத்திரம், 21 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சு  தெரிவித்துள்ளது.

அரச அமைப்பாக இயங்கி வரும் இந்த நுகர்வோர் அதிகார சபை, நுகர்வோரைப் பாதுகாப்பதையும் நியாயமான சந்தைப் போட்டிநிலை நிலவுகின்றமையை உறுதிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

consumer-affairs-720x480

Related posts:

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலரே இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர் - யாழ்ப்ப...
கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது - ...
பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - அவுஸ்திரேலிய...