நீர் மின் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம்!

Thursday, February 16th, 2017

நாட்டில் நிலவி வரும் வரட்சியை அடுத்து, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருவது தெரியவந்துள்ளது.

இந் நிலையில், நீர் மின் உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டி ஏற்படலாம் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரானது, குடிநீர் மற்றும் விவசாயத்தை மேற்கொள்வதற்கே போதுமானதாக உள்ள நிலையில், மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது இயலாத காரியம் என்றும் அச்சங்கத்தின் தலைவர் அத்துல வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில், ஏனைய தேவைப்பாடுகளுக்காக, திறந்துவிடப்படுகின்ற நீரிலிருந்து 11 சதவீத மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகின்றது  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Mullai

Related posts: