நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்?

Saturday, April 1st, 2017

வரும் நாட்களில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.  நீரை சுத்திகரித்து பொது மக்களுக்கு வழங்கும் போது மேலதிக கட்டணம் ஒன்றை அறவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நீர்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  மொனராகலை, கும்புக்கனை பிரதேசத்தில் நீர் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts: