நீர் உயிரின உற்பத்திக்கு சீனா விருப்பம்!

Wednesday, September 13th, 2017

நீர் உயிரின உற்பத்தியை அதிகரிப்பதற்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தைபோன்று நிதி முதலீடுகளை மேற்கொள்வதற்கும் சீன முதலீட்டாளர்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர்.பாரிய அளவிலான நீரியல் இன உற்பத்தி தொடர்பில் இவர்கள் சீனாவில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் தொடர்பாக விரிவாக இவர்கள் கலந்துரையாடினர்.

Related posts: