“நீரைக்காட்டிலும் அடர்த்தி மிக்கது” இலங்கையின் உறவு குறித்து இந்தியாவின் நிலைப்பாடு – இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு!

நீரை காட்டிலும் இரத்தம் அடர்த்தி மிக்கது. இது போன்றே இலங்கையும் இந்தியாவின் உறவு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எனவே இக்கட்டான நிலையிலும் இந்தியா இலங்கையுடன் இணைந்து செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் இந்தியா செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார்.
இதேவேளை கடினமான தருணங்களை கடந்து வரும்போது இலங்கையின் உண்மையான நண்பர் யார் என்பதே முக்கியம் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்தாகும்?
மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கோரிக்கை!
ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்துள்ள முடிவு!
|
|