நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளுடன் கூடிய 50 அதிசொகுசு சுற்றுலா விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, July 20th, 2021

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் உயர்ரக சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள ஒரு சில நாடுகள் நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா விடுதிகள் (Water Villas) எனும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கற்பிட்டி மற்றும் ஏனைய கடலோரப் பிரதேசங்களில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா விடுதிகளைப் பயன்படுத்த முடியுமென தெரியவந்துள்ளது.

தீவுச் சுற்றுலா விடுதிகள் எண்ணக்கருவை மேம்படுத்தி கற்பிட்டி பிரதேசத்தில். சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள 12 தீவுகள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கற்பிட்டி பிரதேசத்தில் வெள்ளை I, II மற்றும் III போன்ற தீவுகளை நீண்டகாலக் குத்தகைக்குப் பெற்றுக் கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட சன் ரிசோட் இன்வெஷ்ட்மென்ட் லங்கா (தனியார்) கம்பனியால் நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா விடுதிகளுடன் கூடிய 50 அதிசொகுசு சுற்றுலா விடுதிகளை நிர்மாணிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை நீதிபதிகளின் நிறுவனம், இலங்கையிலுள்ள நீதித்துறைக்காக அமைந்துள்ள ஒரேயொரு கற்கை நிறுவனமாவதுடன், அதன் மூலம் நீதிபதிகளுக்குப் போதுமான பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இயலளவை அதிகரிப்பதற்காகவும் கிடைக்கின்ற ஒத்துழைப்புக்கள் தொடர்பாக திருப்தியடைய முடியாதுள்ளது.

உலகில் நீதிபதிகளுக்குத் தேவையான கல்வியை வழங்குவதற்காகவும் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் பல்கலைக்கழகத்திற்குச் சமாந்தரமான வகையிலான வசதிகளுடன் கூடிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சட்;ட மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. அதே போல் நீதிமன்ற நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக தேவையான வசதிகளை வழங்க வேண்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையில் நீதித்துறைப் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார அவர்களின் தலைமையில் துறைசார் நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: