நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாகாதார தரப்பினர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Tuesday, August 10th, 2021

நாட்டில் கொவிட் தொற்றால் மாத்திரமின்றி, ஏனைய நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்வரும் வாரங்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் கொவிட் தொற்று பரவலின் தீவிர நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறான நிலையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் அளவுக்கதிக நோயாளர்களால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளுக்கு சமுகமளிப்பதை தவிர்ப்பதாகவும், இதன் காரணமாக எதிர்வரும் வாரங்களில் கொவிட் அல்லாத வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே எவ்வித அச்சமும் இன்றி வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: