நீரில் எண்ணெய் கலந்த விவகாரத்தில்  கையூட்டல் பெறப்பட்டனவா? விசாரணை நடத்துமாறு நிதி மோசடிப் பிரிவுக்கு நீதிமன்று!

Wednesday, February 1st, 2017

நிலத்தடி நீரில் ஒயில் கலந்த விவகாரத்தில் அரச அதிகரிகள் மற்றும் தவறான அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டவர்களும் ஏதாவது கையூட்டல் பெற்றுக்கொண்டனரா என்பது தொடர்பில் விசாரணை செய்யுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு மல்லாகம் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

சுன்னாகம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீரில் ஒயில் கலந்த வழக்கில் மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் இவ்வாறு உத்திரவிட்டார்.

மன்றின் கட்டளையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

பொதுமக்கள் இந்தப் பிரச்சினை தொடர்பில் 2011அம் ஆண்டிலிருந்து முறையிட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால் நிலத்தடி நீரில் பெரும் கழிவுகளை விட்ட குற்றச்சாட்டில் இதவரை எவருமே கைது செய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. பதிலான அவர்களைக் காப்பாற்றும் முகமாக பல தரப்பினரும் முற்சிப்பது போல் தெரிகிறது.

இந்த வழக்கு முதலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் பின்னர் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டது. எனினும் விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை எதுவும் மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை. பெரும் சுற்றுப்புறச் சூழல் மாசடைதல் ஏற்பட்டிருக்கிறது. எனவே நிலத்தடி நீரில் ஒயில் மற்றும் கிறீஸ் எங்கிருந்து கலந்துள்ளது என்று இலங்கை கனிய வளங்கள் ஆய்வு மையம் உடனடியாக மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது.

அந்த வழக்கின் குற்றச் செயல்களைப் புரிந்தவர்களைத் தப்ப வைக்க அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுப்பதாக மன்றுக்குத் தோன்றுகின்றது. குறித்த குற்றச் செயல்களைச் செய்தவர்களை எவரோ ஒரு மறைமுக கரம் காப்பாற்ற முயற்சிப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளால் உரிய விசாரணை செய்யப்பட்டிருக்கவில்லை. குற்றச் செயல்களைச் செய்தவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், அரச அதிகாரிகள் பலர் இந்தக் குற்றச் செயலுக்கு உடந்தையாக உள்ளார்கள் என்ற சந்தேகமும் மன்றுக்கு ஏற்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் பலர் மற்றும் தவறான அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டவர்கள் ஏதாவது கையூட்;டல் பெற்றுக்கொண்டு அவ்வாறு செய்தனரா என்ற கேள்வியும் மன்றுக்கு எழுகிறது. எனவே நிதிமோசடி விசாணைப் பிரிவுப் பணிப்பாளர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Finacial-crime-51

Related posts: