நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத வலி தெற்கு பிரதேச சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Thursday, March 21st, 2019

புன்னாலைக்கட்டுவன் பகுதி வடக்கு பிள்ளையான்கட்டு மயானத்தில் மனித உடலங்கள் எரிக்கப்படுவதால் அதனை அண்டி வாழும் மக்களதும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்டுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை அப்பகுதி மக்கள் மேற்கொண்டுள்ளனர்.


மக்களது நலன்களை முன்னிறுத்தி குறித்த மயானத்தில் உடலங்கள் எரியூட்ட நீதிமன்றம் தடை விதித்திருந்தது.


இந்நிலையில் தொடர்ந்தும் அச்செயற்பாடுகள் நடைபெறுவதால் நீதிமன்றின் தீர்ப்பை இதுவரை பிரதேச சபை நடைமுறைப்படுத்தாமையால் அப்பகுதி மக்கள் வலி தெற்கு பிரதேச சபைக்கு எதிராக பிரதேச சபையின் முன்றலில் இன்றையதினம் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.

Related posts: