நீதிமன்ற சுயாதீனத் தன்மை பற்றி எவராலும் குற்றம்சுமத்த முடியாது – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை தொடர்பில் உள்நாடு அல்லது வெளிநாடு ரீதியில் எவராலும் குற்றம் சுமத்த முடியாது என, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற அமைப்புக்கள் எதிர்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்ற அரசாங்கம் இடமளிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.கம்பளையில் புதிய நீதிமன்றத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை!
வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு !
|
|