நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் நீதியரசர்!

Friday, September 7th, 2018

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றாமல், நீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி விவகாரம் தொடர்பில், விளக்கமளிப்பதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சி.வி. விக்னேஸ்வரன், இன்று (07) ஆஜராகியிருந்தார்.

முன்பதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நிலையில், வடக்கு முதல்வர் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.
அதன்படி டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: