நீதிமன்றங்களின் உள்ளகநிர்வாக பணிகள் நாளைமுதல் ஆரம்பம்!

Sunday, April 19th, 2020

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தவிர்ந்த ஏனைய நீதிமன்றங்கள் நாளை முதல் உள்ளக நிர்வாகப்பணிகளுக்காக செயற்படவுள்ளதுடன் வழக்குகளுக்கான புதிய திகதிகள் குறிக்கப்படும் செயற்பாடும் உள்ளடங்கும் என்றும் நீதிசேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அனைத்து நீதிமன்ற பணியாளர்களும் நாளை பணிகளுக்கு திரும்பவேண்டும். இதன்போது தமது அடையாள அட்டைகளை அவர்கள் ஊரடங்கு நேர அனுமதியாக பயன்படுத்தமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக நீதிமன்றங்கள், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், மேல்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்கள் நாளை செயற்படவுள்ளன. இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏப்ரல் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கூடவுள்ளது.

Related posts: