நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு தீர்ப்பு!

Tuesday, June 7th, 2016

கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு கல்முனை மாளிகைக்காட்டில் வைத்து சின்னலெப்பை அலாவுதீன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை குற்றச்சாட்டில் முதலாம் குற்றவாளியான கொலை செய்யப்பட்டவரின் மனைவியான கலந்தர் ரூபியாவே இவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும், இக்கொலை குற்றச்சாட்டில் இரண்டாம் குற்றவாளியாக பெயரிடப்பட்டிருந்த செல்லத்துரை என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு  நிரூபிக்கப்படாமையால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சின்னலெப்பை அலாவுதீன் கொலை செய்யப்பட்ட போது அவரின் மனைவியான கலந்தர் ரூபியா குறித்த வீட்டிலேயே இருந்துள்ளார். அத்துடன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையினால் இந்த மரணம் சம்பவிக்கவிலை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தர்.

இவ்விடயங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் குற்றவாளியான இனங்காணப்பட்ட கலந்தர் ரூபியா என்பவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் கீழ் கல்முனை மேல்நீதிமன்றில் இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பினை இன்று வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.

Related posts: