நீதித்துறையின் செயற்பாட்டுக்கு மொழி தடையாக இருக்கக்கூடாது – ஜனாதிபதி !
Thursday, December 21st, 2017நீதித்துறை செயற்பாட்டுக்கு மொழி தடைடயாக இருக்கக் கூடாது என்பதுடன் நீதித்துறையில் மட்டுமன்றி ஏனைய அனைத்து அரச சேவை நிறுவனங்களிலும் மொழி அறிவை மேம்படுத்துவதற்கு தற்போது துரித நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் எதிர்வரும் மூன்று வருடங்களில் இப் பிரச்சினையை குறைக்க முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். கொழும்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற நீதிச்சேவை சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னேற்றமான முறைமைகளைப் பின்பற்றி வழக்குகள் தாமதமாவதிலுள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|