நீதித்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நீதித்துறைக்கு சுமார் 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மதுகமவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டத்தொகுதி குறித்த கள விஜயத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மக்களுக்கு இலகுவாகவும் குறுகிய காலத்திற்குள் தமது நீதிமன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் தற்போதய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இதற்காக ஜனாதிபதியினதும் பிரதமரினதும் வழிகாட்டலின் கீழ் பௌதீக மற்றும் மனிதவள அபிவிருத்திக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் அரச பகுப்பாய்வு அறிக்கையை வழங்குவதற்கு தேவையான பௌதீக வளமும் மனித வளமும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அத்தோடு அபராத முறையையும் மறுசீரமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|