நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை கோரும் இலங்கை!

Tuesday, December 21st, 2021

நீண்டகால கடன் அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை வழங்குமாறு நைஜீரியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இலங்கைக்கான நைஜீரிய தூதுவருக்கும் இடையில் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் கம்மன்பில இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பில் பெரும் சிக்கலான நிலைமையை எதிர்நோக்கி வருகிறது.

இதன் காரணமாக நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கை ஏற்கனவே சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: