நீங்கள் அடித்துக்கலைக்க நாங்கள் சாதாரணமானவர்கள் அல்லர் – கஜேந்திரனுக்கு எச்சரிக்கைவிடும் சிவாஜிலிங்கம்!

நீங்கள் வார்த்தைகளை அளந்து பேசுங்கள். நாங்களும் பேச ஆரம்பித்தால் நீங்கள் காதுகளைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் எம். கே. சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை(21) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது அங்கு போராட்டம் நடாத்தியவர்களுள் நீண்ட பதாதைகளுடன் நின்றிருந்த சிவாஜிலிங்கம் 30/1 பிரேரணையின் பிரகாரம் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தினார் என செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், 30/1 என்ற தீர்மானம் உள்நாட்டு விசாரணையல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
பான்கீ மூன் வருகையின் போது கலந்து கொண்டிருந்த சிவாஜிலிங்கத்தை நாம் அடித்துக் கலைத்திருப்போம். நாகரீகம் கருதி அவ்வாறு செய்யவில்லை என நண்பர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நீங்கள் அடித்துக் கலைக்க நாங்கள் சாதாரணமானவர்களல்ல எனவும் கூறினார்.
Related posts:
ஆணின் சடலம் மீட்பு
பால் சார்ந்த உற்பத்திகள் தொழில்நுட்ப பயிற்சிநெறி!
ஆளும் தரப்பு பங்காளிக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் தலைமையில் நாளை கூட்டம் !
|
|