நிஷா பிஸ்வால் இன்று இலங்கை வருகை!

Tuesday, July 12th, 2016

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அரச உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரையும் நிஷா பிஸ்வால் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகலாயம் குறிப்பிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இலங்கையின் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெனிவா கூட்டத் தொடரின்போது இலங்கை அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: