நிவாரணம் கிடைக்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 15 ரூபாயாகவும் ஒரு லீட்டர் டீசலின் விலையை 25 ரூபாயாகவும் அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிதர்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி நியமனம்!
யாழ்ப்பாணத்திலும் தனிமைப்படுத்தல் நிலையம்!
மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி அமைச்சர் பந்துல குணவர்தன கடிதம்!
|
|