நில அளவைத் திணைக்கள மனிதவளம் பற்றாக்குறையை நீக்குவதற்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Friday, March 12th, 2021

நில அளவைத் திணைக்களத்திடமுள்ள மனிதவளம் பற்றாக்குறையை  நீக்குவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் காணி அமைச்சர் ஆகிய இருவர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகியலல் – நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 04 வருட காலத்தில் 5000 குளங்கள் மறறம் வாய்க்கால்களை மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறான பாரிய குளங்களின் நில அளவை நடவடிக்கைகளை 03 வருட காலத்தில் பூர்த்தி செய்வதற்கு தற்போது நில அளவைத் திணைக்களத்திடமுள்ள மனிதவளம் போதாதென குறித்த திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.

இநநிலையில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகம் அல்லது ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் பட்டத்தைப் பெற்று அளவையியல் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள 70 மாணவர்களை தற்காலிக அடிப்படையில் 03 வருடகாலம் பயிலுநர்களாக நில அளவைத் திணைக்களத்திற்கு இணைத்துக் கொள்ளும் யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் அவர்களை நீர்ப்பாசன திணைக்களத்திற்கு இணைப்புச் செய்து நில அளவைத் திணைக்களத்தின் சிரேஷ்ட நில அளவையாளர்கள் இருவரின் கண்காணிப்பின் கீழ் அளவையியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் காணி அமைச்சர் இருவரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: